முகப்பு
தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தவறில்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சூசகம்! 

விரைவில் நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தவறில்லை என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Updated On : 8 செப்டம்பர், 2017 at 4:33 PM
பகிர்:

சென்னை: விரைவில் நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தவறில்லை என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். அதன் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பாஜகவுடன் தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு:

பாஜகவுடன் கூட்டணி வைக்கின்ற நோக்கம் தலைவர்களுக்கு இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆனால் அது ஒன்றும் தவறு இல்லையே?   அதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. நாங்கள் ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக இணைந்து போட்டியிட்டவர்கள்தானே?

Advertisement

நாங்கள் மட்டும் இல்லை; திமுக கூட பாஜகவுடன் கூட்டணி அமைத்து கடந்த காலங்களில் போட்டியிட்டுள்ளது. அத்துடன் மத்திய அமைச்சரவையிலும் இடம் பிடித்துள்ளது. இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

யாருடன் கூட்டணி என்பது குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய தலைவர்கள் இணைந்து முடிவெடுப்பார்கள்.

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.