முகப்பு
தமிழ்நாடு

இனி யார் நினைத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முதல்வர் பழனிசாமி ஆவேசம்

இனி யார் நினைத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முதல்வர் பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:


சென்னை: இனி யார் நினைத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முதல்வர் பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு  கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (செப்.12) 10.35 மணியளவில் நடைபெற்றது. இதில், சசிகலா நீக்கம் உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்ட்டன.

இதையடுத்து முதல்வர் பழனிசாமி பொதுக்குழு கூட்டத்தில் பேசி வருகிறார். அவரது பேச்சில், பொதுகுழுவுக்கு தடைவிதிக்க முயற்சித்த நிலையில், பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் தடை விதிக்காததே, நமக்கு கிடைத்த முதல் வெற்றி என்றார்.

மேலும், பிரிந்த இயக்கம் ஒன்றுசேர்ந்த வரலாறு இல்லை. ஆனால், நாம் சேர்ந்திருக்கிறோம். தமிழகத்தில் ஆண்ட கட்சியே தொடர்ந்து மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது அதிமுக மட்டுமே எனவும் இனி யார் நினைத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முதல்வர் ஆவேசமாக பேசினார்..

ஜெயலலிதா இல்லாத நிலையில் நாம் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →