முகப்பு
தமிழ்நாடு

அண்ணா பல்கலை. முறைகேடு: மாணவர் எதிர்காலத்தை பாதுகாக்க முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

உயர் கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைத்து துணை வேந்தர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:25 PM
பகிர்:

உயர் கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைத்து துணை வேந்தர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த 2017 ஏப்ரல், மே மாதங்களில் பருவத் தேர்வில், 3.02 லட்சம் பேர் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். இவர்களில் 73,733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 16,636 பேருக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்திருந்தது.

மறுமதிப்பீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் விடைத் தாள்களை லஞ்ச ஒழிப்புப் பிரிவு  போலீஸார் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தினர். இதில், மறுமதிப்பீட்டில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது.   

அதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், முறைகேடு நடைபெறும்போது அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த ஜி.வி.உமா, மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த பேராசிரியர் பி.விஜயகுமார், உதவிப் பேராசிரியர் ஆர்.சிவக்குமார் உள்பட 10 பேர் மீது 8 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

"மிகவும் பிரபலமான அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடந்திருப்பதும், அந்த விவகாரத்தில் 3 பேராசிரியர்களை துணை வேந்தர் இடைநீக்கம் செய்திருப்பதும் வேதனையளிக்கிறது. 2017-இல் மறுமதிப்பீட்டுக்காக 3.02 லட்சம் மாணவர்கள் முறையிட்டிருந்தனர். 90,000 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் இருந்தது. இதன்மூலம் 73,000 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது மறுமதிப்பீட்டின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தேர்வில் தேர்ச்சியடையாதவர்கள் மறுமதிப்பீட்டில் தேர்ச்சியடைந்திருப்பது என்பது மோசமான செய்தி.

அண்ணா பல்கலைக்கழகத்தின் நற்பெயரை காப்பதற்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரியை பரிந்துரை செய்து இந்த முறைகேட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உயர் கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைத்து துணை வேந்தர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும்" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →