தமிழ்நாடு

‘சர்கார்’ படத்திற்கு ஆதரவாக அரிவாளுடன் பேசி வீடியோ வெளியிட்ட இரு இளைஞர்கள் கைது

விஜய் ரசிகர்கள் எனக்கூறிக்கொண்டு சர்கார் படத்திற்கு ஆதரவாக அரிவாளுடன் பேசியவாறு அதிமுகவினருக்கு சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு

DIN


விஜய் ரசிகர்கள் எனக்கூறிக்கொண்டு சர்கார் படத்திற்கு ஆதரவாக அரிவாளுடன் பேசியவாறு அதிமுகவினருக்கு சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு மிரட்டல் விடுத்த இளைஞர்களை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம், கதை திருட்டு, அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல சர்ச்சைகளை எழுந்தது. அதிமுகவின் தொடர்ந்து போரட்டங்கள் நடத்தி வந்ததையடுத்து சில காட்சிகள் நீக்கப்பட்டு கடந்த தீபாவளி அன்று சர்கார் திரையரங்குகளில் வெளியானது.   

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் எனக்கூறிக்கொண்டு பயங்கர ஆயுதங்களுடன் வாட்ஸ் அப், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் அதிமுகவினருக்கு மிரட்டல் வீடியோவை வெளியிட்டிருந்தனர். 

இதையடுத்து சமூக ஊடகங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய தமிழக காவல்துறையினர் தீவிரம் காட்டி வந்தனர். அவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் மத்தி ய குற்றப்பிரிவு அலுவலகத்தில் தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. 

இந்நிலையில், வீடியோவில் இருந்த எண்ணூரை சேர்ந்த சஞ்ய் மற்றும் லிங்கதுரை என்பவரும், வீடியோ எடுத்த வடபழனியை சேர்ந்த அனிஷேக் என்பவர் என தெரியவந்தது. 

இதையடுத்து, சஞ்சய் மற்றும் அனிஷேக் ஆகிய 2 பேரை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்த அரிவாள் மற்றும் செல்லிடைபேசியை பறிமுதல் செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT