முகப்பு
தமிழ்நாடு

தி மு க வும்...நமதே! திகாரும்...நமதே !:  ஸ்டாலினைக் கிண்டல் செய்த தமிழிசை  

வியாழனன்று கரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதற்கு எதிர்வினையாக, தி மு க வும்...நமதே! திகாரும்...நமதே ! என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.  

Updated On : 30 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

சென்னை: வியாழனன்று கரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதற்கு எதிர்வினையாக, தி மு க வும்...நமதே! திகாரும்...நமதே ! என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.  

கரூரில் வியாழனன்று திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தலைமையேற்றுப் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், 'நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல், 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் அதில் அனைத்திலும் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு முழு வெற்றியை பெறப் போகிறது.  இந்த ஜனநாயக தேர்தல் போரானது நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்பும் போராக அமையவிருக்கிறது. எனவே “நாடும் நமதே... நாற்பதும் நமதே” என்பதே நம்முடைய முழக்கமாக  இருக்க வேண்டும் என்று பேசினார். 

இந்நிலையில் வியாழனன்று கரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதற்கு எதிர்வினையாக, திமுகவும்...நமதே! திகாரும்...நமதே ! என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.  

இதுதொடர்பாகஅவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

நாடும் நமதே நாற்பதும் நமதே. என்று கனவுகாணும் ஸ்டாலின்அவர்களே,!ஊழல் சர்க்கார் நமதே!ஊழலுக்கான சர்க்காரியா கமிஷனும் நமக்கே என்று நடந்த தி மு க ஊழல்ஆட்சியை மக்கள் மறக்கவில்லை! தி மு க வும்...நமதே! திகாரும்...நமதே ! என்று கடந்த காங்கிரஸ் கூட்டணியில் உங்கள் சாதனையையும் மக்கள்மறக்கவில்லை. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →