முகப்பு
தமிழ்நாடு

நடிகர் கமல்ஹாசனின் மதுரை கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு! 

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்திற்கு ஆரம்பாக இருக்கப்போகிற மதுரை கூட்டத்திற்கு அனுமதி கோரி காவல்துறையில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:16 PM
பகிர்:

மதுரை: நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்திற்கு ஆரம்பாக இருக்கப்போகிற மதுரை கூட்டத்திற்கு அனுமதி கோரி காவல்துறையில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த சுற்றுப் பயணத்தை முதல்கட்டமாக இராமநாதபுரத்தில் ஆரம்பித்து பின் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளதாகவும், ”மக்களின் ஆதரவோடு இந்த சுற்றுப் பயணம் தொடங்கிகிறேன் கரம் கோர்த்திடுங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

முதல் கட்டமாக மதுரையில் 21-ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த கூட்டமானது முதலில் மதுரை அரசரடியில் நடைபெறும் என்று முதலில் தகவல்கள் தெரிவித்தன.   

ஆனால் தற்பொழுது நகரத்திற்கு வெளியே மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லூரி அருகே உள்ள மைதானம் கூட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அனுமதி கோரி மதுரை காவல்துறையில் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

முழு கட்டுரையைப் படிக்க →