தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம்: முரணான தகவல்கள் அளித்தோரை விசாரிக்க வேண்டும்: வழக்குரைஞர் மனோஜ் பாண்டியன் வலியுறுத்தல்

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்தோரை விசாரிக்க வேண்டும் என முன்னாள் எம்.பியும், வழக்குரைஞருமான மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், அவரது உதவியாளர், இல்லத்தில் வேலை செய்தவர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளனர்.
முரணான தகவல்கள்: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பியும், வழக்குரைஞரும், சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியனின் மகனுமான மனோஜ் பாண்டியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தாôர். 
இந்த நிலையில், மனோஜ் பாண்டியனுக்கு விசாரணை ஆணையம் அண்மையில் அழைப்பாணை அனுப்பிருந்தது. அதனடிப்படையில், அவர் விசாரணை ஆணையத்தில் புதன்கிழமை 
ஆஜரானார். காலை 10.30 மணிக்குத் தொடங்கிய விசாரணை பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதில் இருந்து எனக்குத் தெரிந்த விவரங்கள் அனைத்தையும் தெரிவித்தேன். 
அவரது சிகிச்சை, மரணம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் தெரிவித்த அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT