தமிழ்நாடு

வருமான வரி சோதனை: ரூ.30 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு

DIN

மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலியில் பிரபல உணவகங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில், ரூ. 30 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை மண்டல வருமான வரித் துறை அதிகாரிகள் குழுவினர், புதன்கிழமை பிற்பகலில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை வரை மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலியில் உள்ள பிரபல உணவகங்களில் சோதனை நடத்தினர். மதுரையில் பிரபலமாக உள்ள அசைவ உணவகங்களின் 9 கிளைகளில் சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல், திருமங்கலம் அருகே நான்குவழிச் சாலையில் உள்ள உணவகம், அதன் திருநெல்வேலி பிரதானக் கிளைகள், திண்டுக்கல்லில் உள்ள பிரபலமான 2 பிரியாணி உணவகங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. திண்டுக்கல்லில் உள்ள ஒரு உணவகத்தில் மட்டும் வியாழக்கிழமை பிற்பகல் வரை சோதனை தொடர்ந்தது. இச்சோதனையில் மேற்படி உணவகங்கள் ரூ.30 கோடி வரை வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.
கட்டுமான நிறுவனத்தில் சோதனை: மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை பிற்பகலில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை இரவு வரை நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT