முகப்பு
தமிழ்நாடு

நீதிமன்ற நிர்பந்தத்தாலேயே லோக் ஆயுக்த சட்ட மசோதா நிறைவேற்றம்

நீதிமன்ற நிர்பந்தத்தாலேயே லோக் ஆயுக்த சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கூறினார்.

Updated On : 10 ஜூலை, 2018 at 2:06 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:41 PM

நீதிமன்ற நிர்பந்தத்தாலேயே லோக் ஆயுக்த சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கூறினார்.
திருவாரூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
நாடாளுமன்றத்துக்கும், சட்டப் பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முறையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. ஒரே தேர்தலில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் தனித்தனி தேர்தலே சரியாக இருக்கும்.
தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேறி இருக்கிறது. இச்சட்டத்தை நிறைவேற்றாமல் தமிழக அரசு காலம் கடத்தியது. 
தற்போது நீதிமன்ற நிர்பந்தத்தாலேயே லோக் ஆயுக்தா சட்ட மசோதா சட்டப் பேரவையில் நிறைவேறியுள்ளது என்றார் முத்தரசன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.