முகப்பு
தமிழ்நாடு

தமிழக மக்களை இழிவு படுத்தி விட்டார் கமல்: தமிழிசை பாய்ச்சல் 

கர்நாடகாவுக்கு சென்று முதல்வர் குமாரசாமியைச் சந்தித்ததன் மூலம் தமிழக மக்களை கமல் இழிவு படுத்தி விட்டார் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்துத் தெரிவித்துளார்

Updated On : 6 ஜூன், 2018 at 1:36 PM
பகிர்:

மதுரை: கர்நாடகாவுக்கு சென்று முதல்வர் குமாரசாமியைச் சந்தித்ததன் மூலம் தமிழக மக்களை கமல் இழிவு படுத்தி விட்டார் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்துத் தெரிவித்துளார்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கர்நாடக முதல்வர் குமாரசாமியை கடந்த திங்களன்று சந்தித்து காவிரி நீர் திறந்து விடுவது குறித்து பேச்சுவார்தை நடத்தினார். விவசாயிகளின் பிரதிநிதியாக தான் கர்நாடகா வந்து குமாரசாமியை சந்தித்ததாக அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் கர்நாடகாவுக்கு சென்று முதல்வர் குமாரசாமியைச் சந்தித்ததன் மூலம் தமிழக மக்களை கமல் இழிவு படுத்தி விட்டார் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்துத் தெரிவித்துளார்

Advertisement

மதுரையில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கமல் தனிப்பட்ட முறையில் தாராளமாக  பெங்களூரு சென்று கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சந்திக்கலாம். தமிழகத்திற்கு தண்ணீர் தர இ யலாது என்று பிரசாரம் செய்த அவரை ஆராதிக்கலாம். ஆனால் மக்கள் பிரதிநிதியாக, விவசாயிகளின் பிரதிநிதியாக சென்று, சந்திப்பதும்,ஏற்கனவே முடிந்து போன விஷயமாக காவிரி ஆணைய அறிவிப்பு இருக்கும் பொழுது, ஏதோ கர்நாடக முதல்வர் குமாரசாமியின் கைகளில் தான் இதற்கு தீர்வு இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கு வதும் சரியல்ல. இதன்மூலம் தமிழக மக்களை கமல் இழிவு படுத்தி விட்டார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.