முகப்பு
தமிழ்நாடு

குட்கா விவகாரம்: மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது பணமோசடி வழக்கு

குட்கா விவகாரத்தில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது அமலாக்கத்துறை சனிக்கிழமை பணமோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது.

Updated On : 9 ஜூன், 2018 at 4:34 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:46 PM

குட்கா விவகாரத்தில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது அமலாக்கத்துறை சனிக்கிழமை பணமோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி குட்கா விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக குட்கா தயாரிப்பவரிடம் வருமானவரித்துறை நடத்திய ரெய்டில் ரூ. 39,31 கோடிக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது.

இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் மத்திய மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் சிலர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.