சென்னை எம்ஜிஆர் நகரில் சிறுவன் கொலை: ஒருவர் கைது; தாயிடம் விசாரணை
சென்னை எம்ஜிஆர் நகரில் 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாயிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரில் 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாயிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தனியார் டியூஷனில் இருந்து சிறுவனை அழைத்துச் சென்று சேலையூர் அருகே சிறுவனின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கிக் கொன்றதாக நாகராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவனின் தாய்க்கும், நாகராஜ் என்பவருக்கும் இடையே இருந்த தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவன் கொலை செய்யப்பட்டனா என்ற கோணத்தில், தாய் மஞ்சுளாவிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.