தமிழ்நாடு

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு நீர்விநியோகம் நிறுத்தம்! 

PTI

கடலூர்: போதுமான அளவு நீர் இருப்பு இல்லாத காரணத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியில் இருந்து நீர்விநியோகம் நிறுத்தப்படுவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் கோவிந்தராஜ் கடலூர் அருகே உள்ள வடக்குத்தூரில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

போதுமான அவளவு நீர் இருப்பு இல்லாத காரணத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியில் இருந்து நீர்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மொத்த கொள்ளவான 47.50 அடியில் தற்பொழுது இரண்டு முதல் மூன்று அடி வரையே நீர் இருப்பு இருக்கிறது. எனவே சென்னை மற்றும் கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமானார்கோவில் ஆகிய இடங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து போதிய நீர்வரத்து இல்லாத காரணத்தால் ஏரியில் நீர்மட்டம் குறைந்து விட்டது.

அதேசமயம் பரவனாறில் இருந்து சென்னைக்கு நீர் விநியோகம் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT