தமிழ்நாடு

ஆளுநர், முதல்வர் வாகனங்களுக்கு பத்து நிமிடம் வரையே போக்குவரத்தை நிறுத்தலாம்: உயர் நீதிமன்றம் அதிரடி! 

ஆளுநர், முதல்வர் வாகனங்களுக்கு பத்து நிமிடம் வரையே போக்குவரத்தை நிறுத்தலாம் என்று சென்னை  உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

சென்னை: ஆளுநர், முதல்வர் வாகனங்களுக்கு பத்து நிமிடம் வரையே போக்குவரத்தை நிறுத்தலாம் என்று சென்னை  உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் துரைசாமி என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவசர வேலையாக வெளியே சென்றிருந்த பொழுது பிரதான சாலையில் வெளியே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. என்ன காரணம் என்று வினவிய பொழுது, முதல்வர் கோட்டைக்குச் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதாக கூறினர்.

ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் மிக்க கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. மருத்துவமனைக்குச் செல்பவர்கள் உள்ளிட்டோர் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே இத்தகைய சிக்கலை உருவாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுருந்தது. மனுவினை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி, இந்த விவகாரத்தில் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறியதுடன் இது தொடர்பாக நடைமுறைகளுக்காக உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி ஆளுநர், முதல்வர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோரின் வாகனங்கள் செல்வதாக இருந்தால் அதிகபட்சம் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரையே போக்குவரத்தை நிறுத்தலாம் என்றும், ஆனால் இந்த விதிமுறையானது பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு பொருந்தாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT