தமிழ்நாடு

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லை: டிடிவி தினகரன் பேட்டி! 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்று அ.ம.மு.க அமைப்பின் நிறுவனர் டிடிவி தினகரன்... 

DIN

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்று அ.ம.மு.க அமைப்பின் நிறுவனர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க அமைப்பின் நிறுவனர் டிடிவி தினகரன் சென்னையில் வெள்ளியன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

மத்திய அரசு மீது கொண்டு வரப்பட உள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளிக்க தயார் என தம்பிதுரை கூறுவது ஏமாற்று வேலை. தற்பொழுது ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லை. எனவே இது தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. எடப்பாடி பழனிசாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது   ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவர். 

இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4.2.1976: கருணாநிதி, சில மாஜி தி.மு.க. மந்திரிகள் மீது விசாரணை

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து: இருவா் கைது

இந்தியாவுக்கு வரி குறைப்பு: பிரதமா் மோடிக்கு ஜவுளித் தொழில் அமைப்புகள் நன்றி

கர்நாடக பேரவையில் விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம்

கொலை வழக்கு குற்றவாளி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

SCROLL FOR NEXT