முகப்பு
தமிழ்நாடு

மத்திய அரசு தமிழகத்துக்கு உரிமை பெற்றுத் தரும்: தமிழிசை நம்பிக்கை

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு பெற்றுத் தரும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Updated On : 15 மே, 2018 at 1:39 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு பெற்றுத் தரும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காவிரி வரைவுத் திட்டம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களுக்கு அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:-
காவிரி வரைவு திட்டத்தில், இணை ஆணையம் போன்ற அமைப்போ, வேறு எந்த வகையான அமைப்போ என்பது பற்றி நமக்குக் கவலையில்லை. நமக்குக் கிடைக்க வேண்டியது காவிரி தண்ணீர் மட்டுமே. பெயரில் ஒன்றுமில்லை. நீரில்தான் எல்லாம் இருக்கிறது. அப்படிப் பார்க்கும் போது மத்திய அரசு கால அவகாசம் எடுத்துக் கொண்டு, எல்லா நீர்வளத் துறை செயலாளர்களிடமும் தனது கருத்துகளை விவாதித்து பொறுமையாக ஒருமுடிவை எடுத்து உச்ச நீதிமன்றத்தில் தெரியப்படுத்தி இருக்கிறது. நியாயம் கிடைக்கும் அளவுக்குத்தான் மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்துக்கு சாதகமாக நடந்து கொண்டிருக்கிறது இருக்கிறது என்றால், தேர்தலுக்கு முன்பே அங்கே சொல்லி சாதகமாக வாக்குகளை வாங்கியிருக்கலாம். தமிழகத்துக்குத்தான் உரிமை பெற்றுத்தர வேண்டும் என்பதில் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது. தமிழக உரிமை என்றுமே மறுக்கப்படாது என்பதிலும் தெளிவாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.