முகப்பு
தமிழ்நாடு

சற்று நேரத்தில் சட்டப்பேரவை கூட்டம்: திமுக எம்எல்ஏ-க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ளனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:10 PM
பகிர்:

அரசின் ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிதியைப் பெற பேரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதற்காக துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். இதற்காக சட்டப் பேரவை இன்று (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது. 

புயலைக் கிளப்பும் பிரச்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் 13 பேர் உயிரிழந்தனர். இந்தப் பிரச்னையை பேரவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்ப முடிவு செய்துள்ளன. 

அதற்கேற்றவாறு தற்போது சட்டப்பேரவைக்கு வரும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். இதனால், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால், தலைமைச் செயலகத்தில் வழக்கத்துக்கு மாறாக கூடுதல் போலீஸார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →