தமிழ்நாடு

வரும் ஆண்டு பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு: தமிழக அரசு தகவல் 

DIN

மதுரை: வரும் ஆண்டு பள்ளி பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்று மதுரை உயர் நீதிமன்றத் கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் எம்.சங்கிலி. தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலரான இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். சுபாஷ் சந்திர போஸுடன் இணைந்து சுதந்திரத்துக்காக போராடி பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். தனது சொத்துக்களை விற்று ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக செலவு செய்துள்ளார். இவரது பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இளம் தலைமுறையினர் இவரது வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில் 1978-1979 ஆண்டு ஆறாம் வகுப்பு பாடத்தில் இவரது வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2018-2019 கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசுக்கு மனு செய்தும் நடவடிக்கை இல்லை.  எனவே பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு கடந்த 28.09.18 அன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் வரும் ஆண்டு பள்ளி பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்று மதுரை உயர் நீதிமன்றத் கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

இந்த வழக்கு வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் வரும் கல்வியாண்டில் 7-ஆம் வகுப்புக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT