முகப்பு
தமிழ்நாடு

காட்டாங்குளத்தூர் பல்கலை விடுதியில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: லிஃப்ட் ஆபரேட்டர் கைது

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலை விடுதியில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த லிஃப்ட் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டார்.

Updated On : 23 நவம்பர், 2018 at 12:50 PM
பகிர்:


சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலை விடுதியில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த லிஃப்ட் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டார்.

பல்கலைக்கழகத்தின் விடுதியில் உள்ள லிஃப்டில் மாணவி ஒருவர் ஏறியதும், அதில்  இருந்த ஆபரேட்டர், பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். அப்போது லிஃப்ட் நிற்காமல் மேலும், கீழும் சென்றதால் உதவி கேட்டு மாணவி கூச்சலிட்டார். மாணவி கூச்சலிட்டதை அடுத்து சக மாணவ, மாணவிகள் அவரை மீட்டனர்.

இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்காமல், லிஃப்ட்  ஆப்ரேட்டர் அர்ஜூனனைக் காப்பாற்ற பல்கலைக்கழக நிர்வாகம் முயற்சிப்பதாகக் கூறி, நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் நேற்று இரவு முதல் பல்கலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.

Advertisement

மாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்த, மறைமலைநகர் காவல்துறையினர், லிஃப்ட் ஆபரேட்டரைக் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.