தமிழ்நாடு

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

DIN

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. ஒருசில மாவட்டங்களில் கனமழையும் கொட்டித் தீர்த்து வருகிறது.

இதற்கிடையே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கையையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த மூன்று நாள்களுக்கு மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து வரும் 7-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மிகக் கனமழை இருக்கும் என பேரிடர் மேலாண்மை இயக்குநரகம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளையும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் நாளை இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT