முகப்பு
தமிழ்நாடு

ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:14 PM
பகிர்:

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: 

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Advertisement

வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் தெற்கு மற்றும் தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும். தென் தமிழக கடலோர பகுதிகளில் தென் மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35-45 கி.மீ. வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும். எனவே, மீனவா்கள் கவனமாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.