தமிழ்நாடு

ஹெச்.ராஜா மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - திமுக அமைப்புச் செயலாளர்

DIN

காவல்துறை மற்றும் உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கண்ணியக் குறைவான வார்த்தைகளால் பேசிய ஹெச்.ராஜா மீது தமிழக அரசு கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் மெய்யாபுரம் கிராமத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா போலீஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதத்தில் காவல்துறையில் ஊழல் நடைபெறுவதாகவும், உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசினார். இந்த விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்த விவகாரத்தில் ஹெச்.ராஜா மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக, அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, 

"பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தமிழக காவல்துறையினரைக் கண்ணியக் குறைவான வார்த்தைகளால் அடாவடித்தனமாகப் பேசியிருப்பதுடன் உயர் நீதிமன்றத்தினை அவமதிக்கும் வகையில் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். காணொளி ஆதாரத்துடன் இவை வெளியாகியுள்ளன.  தமிழகத்தின் அமைதியைக் குலைத்து கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படும் ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்றார். 

ஆனால், இதுதொடர்பாக ஹெச்.ராஜா இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேசுகையில், "நான் நீதிமன்றத்தை மதிப்பவன், அந்த விடியோவில் நான் பேசுவதை யாரோ எடிட் செய்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT