தமிழ்நாடு

நான் எதற்கும் பயந்து ஓடிப்போகிறவன் கிடையாது: கருணாஸ்

தான் எதற்கும் பயந்து ஓடிப்போகிறவன் கிடையாது என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

DIN

தான் எதற்கும் பயந்து ஓடிப்போகிறவன் கிடையாது என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
நான் பேசிய 47நிமிட வீடியோ யூட்யூபில் உள்ளது; முழுவதையும் கேட்டால் நான் தவறாக பேசியதாக சொல்லமாட்டீர்கள். பத்திரிக்கை விவகாரத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை கூறியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்.

ஒருமையில் பேசிவிட்டேன் என கூட்டம் முடிந்து வந்ததும் எனது மனைவியிடம் வருத்தம் தெரிவித்தேன். குடியரசுத்தலைவரை நான்தான் தேர்வு செய்தேன் என கூறுகிறேன். இதில் என்ன தவறு?. கூவத்தூரில் தங்கி முதல்வரை தேர்வு செய்தேன் என கூறுவதில் என்ன தவறு?.

தேவர் ஜெயந்தி அன்று மரியாதை செலுத்த சென்றபோதுகூட எனக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை. உளவுத்துறை அதிகாரி ஒருவர் முதல்வரிடம் என்னைப் பற்றி ஒரு பொய்யான தகவல் சொன்னார் என மட்டும்தான் கூறினேன். தவறு செய்த காவல்துறை அதிகாரி மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நான் அனைத்துச் சமுதாயத்தையும் நேசிக்கக்கூடியவன். யார் மீதும் கோபம் இல்லை. ஒருவேளை நான் பேசியது யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் என் மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் பயந்து ஓட மாட்டேன்; எதையும் சந்திக்க தயாராக உள்ளேன். என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்

நான் திமுகவின் பி டீமா? பன்னீர் செல்வம் விளக்கம்!

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!

நான் அழுதுவிடுவேன் என பயம் வந்துவிட்டது!: Kamal Hassan | Agaram foundation

SCROLL FOR NEXT