முகப்பு
தமிழ்நாடு

நமது பிரதமர் அப்துல்..!: பிரசாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய அமைச்சர் சரோஜா 

தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்திய பிரதமர் பெயரை அமைச்சர் சரோஜா  மாற்றிக் கூறியதால், பார்வையாளர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Updated On : 7 ஏப்ரல், 2019 at 2:23 PM
பகிர்:

ராசிபுரம்:  தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்திய பிரதமர் பெயரை அமைச்சர் சரோஜா  மாற்றிக் கூறியதால், பார்வையாளர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய பிரசாரத்தில் சம்யத்தில் சில நகைச்சுவைக் காட்சிகளும் அரங்கேறுவது உண்டு.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்திய பிரதமர் பெயரை தமிழக அமைச்சர் சரோஜா  மாற்றிக் கூறியதால், பார்வையாளர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement

அதிமுக சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரச்சாரக் கூட்டம் சனிக்கிழமையன்று  நடைபெற்றது. நாமக்கல் அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து அவர் காக்காவிரி பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, ''மறைந்த தமிழக முதல்வர் 'அம்மா' கட்டிக் காத்த வெற்றிச் சின்னத்தில், பாரதப் பிரதமர் அப்துல்..'' என்று பேசினார். ஆனால் உடனே சுதாரித்துக்கொண்ட சரோஜா, ''பாரதப் பிரதமர் மோடியின் ஆசிபெற்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் காளியப்பனுக்கு வாக்களியுங்கள்'' என்று சரிசெய்து பேசினார்.

பிரதமர் பெயரையே அமைச்சர் மாற்றிக் கூறியதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.