எனக்கு சொந்தமான இடங்களில் எந்த நேரத்திலும் சோதனை நடத்தப்படலாம்: ப.சிதம்பரம் கணிப்பு
எனக்கு சொந்தமான இடங்களில் எந்த நேரத்திலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்படலாம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த
எனக்கு சொந்தமான இடங்களில் எந்த நேரத்திலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்படலாம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், எனக்குக் கிடைத்த தகவல்: என்னுடைய சென்னை மற்றும் மானகிரி வீடுகளில் வருமான வரி இலாகாவின் சோதனை எந்த நேரத்திலும் நடக்கலாம். வருமான வரி அதிகாரிகளை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம் !
எங்கள் தேர்தல் பணிகளை முடக்கவே இந்த நடவடிக்கை என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான்.
இந்த அரசின் அத்து மீறல்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நாளன்று சரியான பாடம் புகட்டுவார்கள் என பதிவிட்டுள்ளார்.