தமிழ்நாடு

பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் ரத்து 

DIN

சென்னை: அதிக அளவில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தின் காரணமாக வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பெருமளவு பணம் குவிக்கப்பட்டுள்ளது என்று கிடைத்த தகவலின் காரணமாக சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது.

குறிப்பாக திமுக பொருளாளர் துரைமுருகனின் ஆதரவாளர்களின் இடங்களில் நடந்த சோதனையில் ரூ. 11 கோடிக்கு மேல் பணம் சிக்கியது. இதனையடுத்து அத்தொகுதியில் தேர்தல்  ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் அதிக அளவில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தின் காரணமாக வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

முன்னதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹு ஊடகங்களுக்கு  அளித்த பேட்டியில், “இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் அனைத்து விவரங்களையும், அறிக்கைகளையும் அளித்துவிட்டோம். அவர்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அவர்களின் உத்தரவுக்கு ஏற்க நடவடிக்கை இருக்கும் " என்று தெரிவித்திருந்தார்.

அதையடுத்து வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என தேர்தல் ஆணைய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி ஒன்றில் தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அதேசமயம் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT