தமிழ்நாடு

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்யக்கோரி மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி 

DIN

புதுதில்லி: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நாடுமுழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது.  இதில் தமிழகத்தில் வேலூர் தவிர்த்த 38 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவை கடந்த 18ந்தேதி நடந்து முடிந்தது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மே 23ந்தேதி நடைபெறும்.

தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பரவலாக வாக்குக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட காரியங்கள் நடைபெற்றதால் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் கே.கே.ரமேஷ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்காநனது திங்களன்று விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து விட்டதால், இம்மனுவை பரிசீலிக்க முடியாது என்று கூறி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT