தமிழ்நாடு

எங்கள் கட்சியை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் பிரச்னை: சீமான் பேட்டி 

எங்கள் கட்சியை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் பிரச்னை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் தெரித்துள்ளார்.

DIN

மதுரை: எங்கள் கட்சியை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் பிரச்னை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் தெரித்துள்ளார்.

கடந்த 5-ஆம் தேதியன்று நடைபெற்ற வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளியன்று காலை 8 மணிக்கு துவங்கியது. ஆரம்பம் முதல் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்று வந்தார்.

ஆனால் திடீர் திருப்பமாக இறுதிநேரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த சுமார் 8 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். 

அதேசமயம் இந்த தொகுதியில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியானது 26 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்றுள்ளது.

இந்நிலையில் எங்கள் கட்சியை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் பிரச்னை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் தெரித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:

எங்களது நாம் தமிழர் கட்சியை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் பிரச்னை.

ஆனால் தொடர்ந்து மக்கள் பிரச்னைகளுக்காக களத்தில் நிற்போம்

தேர்தலில் பணப்பட்டுவாடா இல்லாமல் போட்டியிட்டால் மக்கள் எங்களுக்கு கூடுதலாக வாக்களிக்கும் சூழல் உருவாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT