தமிழ்நாடு

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக தொடர் கனமழை

DIN

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உட்பட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் டிசம்பா் 1, 2 ஆகிய இரு நாள்கள் கன மழைக்கு வாய்ப்புள்ளதா சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை முதல் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ் அணைக்கட்டில் 10 செ.மீ. மழையும், வெட்டிக்காடில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளன. மதுரை மாவட்டம் மேலூர், திருவாதவூர், ஒத்தக்கடை, சிட்டம்பட்டி, கீழவளவு, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பனில் தலா 11 செ.மீ. மழை பதிவுாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, நெற்குணம், தெள்ளார், தேசூர், சாலவேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நீடாமங்கலம் மற்றும் முத்துப்பேட்டையில் தலா 9 செ.மீ., பாண்டவையாறு தலைப்பில் 8 செ.மீ. மழை பதிவுகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT