தமிழ்நாடு

தென் மாவட்டங்களில் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்

DIN

குமரிக்கடல் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தஞ்சை, கும்பகோணம், தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக ராமேசுவரத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக தங்கச்சிமடம் பகுதியில் அமைந்துள்ள ராஜா நகர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT