தமிழ்நாடு

அண்ணா நினைவு நாளை ஒட்டி சமபந்தி போஜனம்: முதல்வர் பங்கேற்பு 

மறைந்த தமிழக முதல்வர் அண்ணா நினைவு நாளை ஒட்டி சென்னையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சமபந்தி போஜன நிகழ்வுகளில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்றனர்.

DIN

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் அண்ணா நினைவு நாளை ஒட்டி சென்னையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சமபந்தி போஜன நிகழ்வுகளில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்றனர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான அறிஞர் அண்ணாவின் 50-ஆவது நினைவு தினம் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

அதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் கூட்டாக  அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அண்ணா நினைவு நாளை ஒட்டி சென்னையில் வெவேறு இடங்களில் சமபந்தி போஜன நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில் கே.கே.நகரில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் பழனிசாமி பங்குபெற்றார். அதேபோல் திருவான்மியூரில் நடைபெற்ற நிகழ்வில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

வேறு சில இடங்களில்நடைபெற்ற நிகழ்வுகளில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

பொறியியல் பணிகளால் விழுப்புரம் மாா்க்கத்தில் ரயில் சேவையில் மாற்றம்

தமிழக முதல்வா் நாளை வருகை: திண்டிவனத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT