தமிழ்நாடு

மற்றவர்களைக் குறை சொல்லியே  ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்: தொண்டர்களை அதிர வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 

DIN

ஒட்டன்சத்திரம்: மற்றவர்களைக் குறை சொல்லியே  எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததாக, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  பேசியது தொண்டர்களை அதிர வைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிறன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வினய் தலைமை வகித்தார். விழாவில் கலந்து கொண்டு தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:

தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எதற்காக என்றால்   கல்வியில் தமிழகம் சிறந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

மற்றவர்களைக் குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 500 ரூபாய்க்கு கறவை மாடு இலவசமாக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

அவரது இந்த பேச்சானது பொதுமக்கள் மத்தியி்ல் சலசலப்பை உண்டாக்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT