அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் உரிய நன்றியை தெரிவிப்பார்கள் என நம்புகிறேன்: முதல்வர்
தமிழக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் உரிய முறையில் நன்றியை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன் என முதல்வர் பழனிசாமி கூறினார்.
சேலம்: தமிழக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் உரிய முறையில் நன்றியை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன் என முதல்வர் பழனிசாமி கூறினார்.
சேலம் நேரு கலையரங்களில் நடைபெறும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார் முதல்வர் பழனிசாமி.
அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் முதல் முறையாக சேலத்தில் இரண்டடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு செயல்படுத்தும் நலத்திட்டத்தின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைகிறது என்று முதல்வர் கூறினார்.
Advertisement
Advertisement
மேலும், சேலத்தில் நவீன கால்நடை பூங்கா அமைக்கப்படும். சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.6000 திட்டம் மகத்தான உன்னதமான திட்டமாகும்.
அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் உரிய முறையில் நன்றியை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன் என முதல்வர் கூறியுள்ளார்.