கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் உள்ள உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் கயத்தாறு வட்டாட்சியர் லிங்கராஜ்.  
தமிழ்நாடு

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா

வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு மணிமண்டபத்தில் உள்ள

DIN


வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டபொம்மன் உருவச்சிலைக்கு வட்டாட்சியர் லிங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் உடனிருந்தார். 
கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் கே.எஸ். குட்டி, பொருளாளர் செண்பகராஜ் உள்ளிட்ட திரளானோர் மாலை அணிவித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மாலை அணிவித்தார். நெல்லை மாவட்டத் தலைவர் காளிதாசன், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் விநாயகமூர்த்தி, செயலர் பாஸ்கர், பொருளாளர் செந்தில்ஆறுமுகம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் காமராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 
கட்டபொம்மன் வம்சாவளியைச் சேர்ந்த திரளானோரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து, கட்டபொம்மன் நினைவிடம் அருகேயுள்ள வீரசக்கதேவி கோயிலில் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT