பபுக் புயல் தீவிரம்: தமிழக, புதுச்சேரி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை
அந்தமான் கடலில் மையம் கொண்டுள்ள பபுக் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம்
அந்தமான் கடலில் மையம் கொண்டுள்ள பபுக் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாய்லாந்து வளைகுடாவில் உருவான ‘பபுக்’ புயல் அந்தமான் கடல் நோக்கி 10 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல், நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தமான் கடலை கடக்குமென்றும், அப்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
புயல் அந்தமானில் கரையை கடந்த பின்பு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் கடற்கரை நோக்கி சென்று 7 அல்லது 8 ஆம் தேதி வலுவிழக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பும். எனவே, மீனவர்கள் இந்த கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பபுக் புயல் காரணமாக தாய்லாந்தில் ஒரு மீனவரும், இரு முதியவர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு பேரிடர் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும், சுமார் 34 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.