தமிழ்நாடு

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு பற்றி நான் கூறியது எனது கருத்தல்ல; மக்கள் கருத்து: கிரண்பேடி 

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு பற்றி நான் கூறியது என் கருத்தல்ல; மக்கள் கருத்தையே நான் பதிவு செய்திருந்தேன் என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

DIN


சென்னை: சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு பற்றி நான் கூறியது என் கருத்தல்ல; மக்கள் கருத்தையே நான் பதிவு செய்திருந்தேன் என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

சென்னை வறண்டது தொடர்பாக நான் கூறியது எனது கருத்தல்ல, மக்களின் கருத்தையே நானும் பதிவிட்டிருந்தேன் என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி இன்று விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி குற்றம்சாட்டியிருந்தார். இந்தியாவின் பெரிய நகரமான சென்னை வறட்சி பாதித்த முதல் நகரமாக மாறியுள்ளது. மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் போன்றவற்றால்தான் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றும் கிரண்பேடி விமரிசித்திருந்தார்.

மேலும், மக்களின் சுயநல எண்ணமும், மோசமான அணுகுமுறையும் கூட இந்தப் பிரச்னைக்குக் காரணம் என்று கூறியிருந்தார்.

கிரண்பேடியின் இந்த கருத்துக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த கருத்து தனது கருத்தல்ல என்றும், மக்களின் கருத்தையே தான் கூறியதாகவும் இன்று அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

SCROLL FOR NEXT