முகப்பு
தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு 

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:26 AM
பகிர்:

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் வியாழனன்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் தங்கமணி கூறியதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத தொகுப்பு ஊதியம் முறையே ரூ.2000 கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும்;

இந்த ஊதிய உயர்வானது மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் ஆகியோருக்குப் பொருந்தும்.  

இந்த ஊதிய உயர்வானது ஏப்ரல் 2019 முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

இதன் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.62.53 கோடி கூடுதலாக செலவாகும்.

இதன்மூலமாக 36,056 ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 

இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →