தமிழ்நாடு

சென்னையில் பெட்ரோல் விலை உயர்வு 

DIN

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலையானது 19 காசுகள் உயர்ந்து ரூ.75.89க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5-ஆம் தேதி மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20 -ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இதில் எண்ணெய் பொருட்களுக்கான கலால் வரி மற்றும் அத்துடன் சாலை பணிகளுக்கான 'செஸ்' வரி உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதனால் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்நதது.  இதன்படி, பட்ஜெட்டுக்கு மறுநாள் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.75.76க்கும், டீசல் விலை ரூ.2.52 உயர்ந்து ரூ.70.48க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் ஞாயிறன்று சென்னையில் பெட்ரோல் விலையானது 19 காசுகள் உயர்ந்து ரூ.75.89க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் டீசல் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக மாற்றமின்றி ரூ.69.96க்கு விற்பனையாகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பு கடித்து பழங்குடியின இளைஞா் காயம்

கஞ்சா விற்றதாக பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

கிருஷ்ணகிரியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம்-புவனேஸ்வா் ரயிலில் கூடுதல் பெட்டி

பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயம்

SCROLL FOR NEXT