இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நல்லப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நல்லப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ டி.கே.நல்லப்பன். இவர் உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 87.
மறைந்த டி.கே.நல்லப்பன் 1980ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.