தமிழ்நாடு

இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா?: ஸ்டாலின் ஆவேசம் 

DIN

சென்னை: இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா? என்று 'சமஸ்கிருதம் தொன்மையான மொழி' என்ற பாடப்புத்தக குறிப்பு சர்ச்சை தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மத்திய பாடத் திட்டத்தின் அடிப்படையில் 12 ஆம் வகுப்பிற்கு வெளியிடப்பட்ட ஆங்கில புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மொழி கி.மு. 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும், சமஸ்கிருத மொழி கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான மொழியாகவும் அந்த ஆங்கில பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா? என்று 'சமஸ்கிருதம் தொன்மையான மொழி' என்ற பாடப்புத்தக குறிப்பு சர்ச்சை தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

எப்படிச் சகிப்பது இக்கொடுமையை? தமிழ் 2300 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம். ஆனால், சமஸ்கிருதமோ 4000 ஆண்டுகள் பழமையானதாம். இப்படித்தான் சொல்கிறது தமிழக அரசின் 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகம். காவியை பூசிக் கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும்? இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா?  

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது: பிரேமலதா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராகி அம்மன்...

ஆழ்வாா்கள் தமிழரங்கம் ஆறாம் ஆண்டு விழா

மாட்டுக் கொட்டகை எரிந்து சேதம்

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

SCROLL FOR NEXT