தமிழ்நாடு

ஜூலை மாதத்துக்கான நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்:  ஜி.கே.வாசன்

காவிரியிலிருந்து ஜூலை மாதத்துக்கான நீரை கர்நாடகம் உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

DIN


காவிரியிலிருந்து ஜூலை மாதத்துக்கான நீரை கர்நாடகம் உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்துக்குத் தண்ணீர் தரக்கூடாது என்ற நோக்கத்திலேயே கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் மழை பெய்தபோதும் தண்ணீர் தர மறுக்கிறது. 
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதனை நிறைவேற்ற வேண்டிய கடமை கர்நாடக அரசுக்கு இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 இரண்டடுக்கு பேருந்துகளுக்கு விரைவில் ஒப்பந்தம்

மக்கிரிபாளையம் கோயிலில் சோமவார சிறப்பு பூஜை

சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவைப் பணிகள் தொடக்கம்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

வேன் திருட்டு வழக்கில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT