தமிழ்நாடு

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாள்: ஸ்டாலின் வைத்த கோரிக்கை 

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாளில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்துவோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாளில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்துவோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த நாளான செவ்வாயன்று,  தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் பின்வருமாறு:

முதல் பெண் மருத்துவர், முதல் மெட்ராஸ் சட்ட மேலவை பெண் உறுப்பினர் என்று பல்வேறு முதன்மை சிறப்புகளைப் பெற்றுள்ள பத்மபூசன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் பிறந்த நாள் இன்று! பெண்ணுரிமை போற்றும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஆறாயிரம் ரூபாய் வழங்கும் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை அறிவித்து, அதற்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் பெயர் சூட்டி மகிழ்ந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.  ஆணாதிக்கத்தை முறியடித்து பெண்களாலும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட முடியும் என்ற வரலாறு படைத்த அம்மையாரின் பிறந்த நாளான இன்று நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு நூலகம் மறைந்துவிட்டது!: கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

பள்ளிச்சட்டம்பி படத்தின் கயாது லோஹர் போஸ்டர்!

டி20 உலகக் கோப்பை சாம்பியன்கள்: 2007 முதல் 2024 வரை!

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: ஸ்காட்லாந்தைப் பந்தாடிய ஆப்கானிஸ்தான்!

ஜெகதீசன் அபார சதம்! டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 238 ரன்கள் குவிப்பு!

SCROLL FOR NEXT