தமிழ்நாடு

சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்தாதீர்: ஊடகங்களுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள்

DIN


அதிகாரப்பூர்வமற்ற நபர்களிடம் கட்சி தொடர்பான விவரங்களைப் பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்த வேண்டாமென அதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து, அக் கட்சி சார்பில் அனைத்து பத்திரிகைகள், ஊடகங்களுக்கு வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ கருத்துகளைத் தெரிவிக்க கட்சியின் சார்பில் செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தவிர, மற்றவர்கள் அதிமுக சார்பில் கருத்துகளைத் தெரிவிப்பது முறையாக இருக்காது என்பதை ஊடகங்கள் நன்கு அறியும்.
எனவே, அதிமுக பிரதிநிதிகள் என்றோ, அதிமுக பெயரை வேறு எந்த வகையிலோ பிரதிபலிக்கும்படி யாரையும் ஊடகங்கள் வழியாக கருத்துகளைத் தெரிவித்த அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம். வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்தவும் வேண்டாம்.
அவ்வாறு மீறுகின்ற சூழலில், அந்த நபர்கள் கொடுக்கும் பேட்டிகளுக்கோ, செய்திகளுக்கோ அதிமுக எந்த வகையிலும் பொறுப்பாகாது. இதுதொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு கட்சித் தலைமையை ஆட்படுத்த வேண்டாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

பிகாரில் கார்-லாரி மோதல்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT