தமிழ்நாடு

தமிழகத்தைச் சேர்ந்த இளம் கவிஞர் சபரிநாதனுக்கு யுவ புரஸ்கார் விருது 

DIN

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த இளம் கவிஞர் சபரிநாதனுக்கு சாகித்ய அகாதமியின் 'யுவ புரஸ்கார்' விருது வழங்கப்பட்டுள்ளது.

சாகித்திய அகாதமி விருதானது ஒவ்வொரு ஆண்டும்  சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு,தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.

குறிப்பிட்ட படைப்பாளிகளின் இலக்கிய பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் இளம் எழுத்தாளர்களுக்கு ‘யுவ புரஸ்கார்’ விருதினையும், சிறுவர் இலக்கிய படைப்பாளிகளுக்கு ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதையும் சாகித்திய அகாதமி  அமைப்பு வழங்கி கெளரவித்து வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கவிஞர் சபரிநாதனுக்கு சாகித்ய அகாதமியின் இவ்வாண்டுக்கான 'யுவ புரஸ்கார்' விருது வழங்கப்பட்டுள்ளது.

'வால்' என்ற அவரது கவிதை தொகுப்புக்காக எழுத்தாளர் சபரிநாதனுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல குழந்தைகள் இலக்கியத் துறைக்கு அளித்த பங்களிப்பிற்காக, எழுத்தாளர் தேவி நாச்சியப்பனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மறைந்த 'குழந்தைக் கவிஞர்' அழ .வள்ளியப்பாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்களிருவருக்கும் பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT