முகப்பு
தமிழ்நாடு

கோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை! 

கடந்த வாரம் கோவையில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து தற்போது மதுரையிலும் தேசிய விசாரணை ஆணைய (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:15 AM
பகிர்:

மதுரை: கடந்த வாரம் கோவையில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து தற்போது மதுரையிலும் தேசிய விசாரணை ஆணைய (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

இலங்கை ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மதகுரு ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தேசிய விசாரணை ஆணைய (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கடந்த 12ந்தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை வந்தனர். அவர்கள் கோவை உக்கடம் பகுதியில் 7 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி தோட்டாக்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில்,   ஷாஜகான்( 25), முகமது உசேன்(25) மற்றும் ஷேக் சபியுல்லா (36) ஆகிய 3 பேரின் வீடுகளில் கோவை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ஐ.எஸ். ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபணமானது. இதைத்தொடர்ந்து அவர்கள் மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்

இந்நிலையில் கடந்த வாரம் கோவையில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து தற்போது மதுரையிலும் தேசிய விசாரணை ஆணைய (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த சதகதுல்லா என்ற இளைஞரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.