தமிழ்நாடு

சமைக்க தண்ணீர் இல்லை; சென்னையில் பூட்டுப் போடப்படும் ஹோட்டல்கள்!

கடுமையான தண்ணீர் பஞ்சம், காய்கறிகளின் வரத்துக் குறைவால் விண்ணைத் தொடும் விலைவாசி காரணமாக சென்னையில் சிறு மற்றும் நடுத்தர உணவு விடுதிகள் பூட்டுப் போடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ENS


சென்னை: கடுமையான தண்ணீர் பஞ்சம், காய்கறிகளின் வரத்துக் குறைவால் விண்ணைத் தொடும் விலைவாசி காரணமாக சென்னையில் சிறு மற்றும் நடுத்தர உணவு விடுதிகள் பூட்டுப் போடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

தற்போதே, குறிப்பிட்ட சில உணவு வகைகளோடு 5 முதல் 6 மணி நேரம் மட்டுமே ஹோட்டல்கள் இயக்கப்படுவதாகவும், இன்னும் ஒரு வாரத்துக்குக் கூட இதே நிலையில் ஹோட்டல்களை நடத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பை விட, 2 மடங்கு கூடுதல் விலைக்கு தண்ணீரை வாங்கும் நிலைக்கு சென்னையில் இருக்கும் 9000க்கும் மேற்பட்ட உணவகங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன. எவ்வளவு விலைக்கும் தண்ணீரை வாங்க சில ஹோட்டல் நிர்வாகங்கள் தயாராக இருந்த போதும், தண்ணீர் கிடைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.

சமைப்பது, சமையல் பாத்திரங்களை சுத்தப்படுத்துவது என உணவுகங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு லாரி தண்ணீரையே நம்பியிருக்கிறோம். எப்போது தண்ணீர் பிரச்னை எழுந்ததோ, அப்போதே ஹோட்டல்களில் கழிவறை வசதிகளை மூடிவிட்டோம். வாடிக்கையாளர்கள் கைக்கழுவக் கூட பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி சின்னக் குவளைகளைத்தான் தருகிறோம் என்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

SCROLL FOR NEXT