மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவியை ராஜிநாமா செய்த மிசோரம் ஆளுநர்
நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மிசோரம் மாநில ஆளுநர் கும்மணம் ராஜசேகரன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ஆய்சோல்: நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மிசோரம் மாநில ஆளுநர் கும்மணம் ராஜசேகரன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
கேரள மாநில பாஜக முன்னாள் தலைவர் கும்மணம் ராஜசேகரன். இவர் கடந்த ஆண்டு மே மாதம் மிசோரம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் இவர் போட்டியிடுவார் என கடந்த சில தினங்களாக பேசப்பட்டது.
Advertisement
இந்நிலையில் அவர் தனது பதவியை வெள்ளியன்று ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
மிசோரம் மாநிலத்திற்கு புதிய ஆளுநரை நியமிக்கும் வரை, அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முக்திக்கு, மிசோரம் ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் தொகுதியில் கும்மணம் ராஜசேகரனை நிறுத்த மாநில பாஜக முழு ஆதரவையும் வழங்கும் என மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறியுள்ளார்.