தமிழ்நாடு

அமமுகவில் இணைந்த தமிழ் சினிமாவின் பிரபல பெண் நடன இயக்குநர் 

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தமிழ் சினிமாவின் பிரபல பெண் நடன இயக்குநர் ஒருவர் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

DIN

சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தமிழ் சினிமாவின் பிரபல பெண் நடன இயக்குநர் ஒருவர் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

கலா தமிழ் சினிமாவின் பிரபல பெண் நடன இயக்குநர்களில் ஒருவராவார். சுமார் 30 வருடங்களாக தமிழ் சினிமாவின் 'மோஸ்ட் வாண்டட்' நடன இயக்குநராக இருந்தவர். ஆணாதிக்கம் நிறைந்த சினிமாத்துறையில் தனி ஒருவராக நின்று சாதித்தவர். இவரைப்போலவே இவரது தங்கை பிருந்தாவும் புகழ்பெற்ற நடன மாஸ்டராவார்.

திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையிலிருந்து ஒதுங்கியுள்ள அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'மானாட மயிலாட' என்னும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினார்.

இந்நிலையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் கலா தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பொதுவாக ஒரு இயக்கம் தலைவர் என்றால் அவர் நம் மனத்திற்குப் பிடித்தவராக இருக்க வேண்டும். அந்த வகையில் டிடிவி தினகரன் எனக்கு பிடித்த தலைவராக இருக்கிறார்.

பொதுவாகவே அவரது செயல்பாடுகளும், அதில் வெளிப்படும் நேர்மைத்தனமையும் என்னைக் கவர்ந்து விட்டது.

நான் 30 வருடங்களாக திரைத்துறையில் இருந்தவள். என்னிடம் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதைத் திறம்படச் செய்வேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய லாரி!

உதகைக்கு விரைந்த பேரிடர் மீட்புக் குழுவினர்!

இணையத் தொடராகும் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம்!

ராமதாஸ் வீட்டில் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்!

வரைவு பட்டியல்: விடுபட்ட வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்: தேஜஸ்வி!

SCROLL FOR NEXT