தமிழ்நாடு

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் மகா குட முழுக்கு

பாகவதாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சென்னகேசவப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகா குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

DIN

பாகவதாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சென்னகேசவப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகா குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
திருத்தணியை அடுத்த சிறுகுமி ஊராட்சி பாகவதாபுரம் கிராமத்தில் பழைமையான சென்னகேசவப் பெருமாள் கோயில் கிராம மக்கள் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து, கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு, மூன்று கால ஹோம பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கி, நடைபெற்று வந்தன.  ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மகா பூர்ணாஹுதி   நடைபெற்றது. தொடர்ந்து, கலசப் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து கோபுரக் கலசத்துக்கு, புனித நீர் வார்க்கப்பட்டு, மகா குட முழுக்கு நடைபெற்றது.
அப்போது கோயில் முன் கூடியிருந்த பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா' என்று பக்தி பரவசத்துடன் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT