தமிழ்நாடு

மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு: 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காகத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

DIN

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காகத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 28-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. பிப்ரவரி 27-ஆம் தேதி குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு பிப்ரவரி 27-ஆம் தேதி 2,500 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. மார்ச் 3-ஆம் தேதி தண்ணீர் திறப்பும் மீண்டும் 1,000 கன அடியாக குறைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 8,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 63.82 அடியாகவும், நீர் இருப்பு 27.61 டி.எம்.சி. யாகவும் இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 39 கனஅடியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 இரண்டடுக்கு பேருந்துகளுக்கு விரைவில் ஒப்பந்தம்

மக்கிரிபாளையம் கோயிலில் சோமவார சிறப்பு பூஜை

சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவைப் பணிகள் தொடக்கம்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

வேன் திருட்டு வழக்கில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT